PAS கட்சியின் வெறுப்பு பரப்புரைகள், நாட்டில் தீவிரமிக்க நடவடிக்கைகளை வளர்ப்பதாக, காலித் சமத் பகிரங்க குற்றச்சாட்டு.

கோலாலம்பூர், மே 21-

PAS கட்சி முன்னெடுத்துவரும் வலதுசாரி அரசியல் பரப்புரைகள், நாட்டில் மதம் சார்ந்த தீவிரமிக்க நடவடிக்கைகளை அதிகரிக்க செய்வதாக, கூட்டரசு பிரதேசத்திற்கான அமானா கட்சி தலைவர் காலித் சமத் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அண்மையில், DAP-யைச் சேர்ந்த செப்புதே நாடாளுமன்ற உறுப்பினர் தெரேசா கொக்-க்கிற்கு துப்பாக்கி குண்டுகளுடன் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள விவகாரத்தைச் சுட்டிக்காட்டி அவர் அக்கூற்றை முன்வைத்துள்ளார்.

அவ்விவகாரத்தில், தெரேசா கொக்-க்கை தற்காத்து பேசியுள்ள PAS கட்சியின் நிலைபாட்டை அமானா கட்சி வரவேற்கின்றது.

இருப்பினும், நாட்டில் DAP கட்சியால் இஸ்லாம் சமயத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, PAS கட்சி தொடர்ந்தாற்போல் பரப்புரைகளை மேற்கொண்டுவருவதால், மதம் சார்ந்த தீவிரமிக்க நடவடிக்கைகளை அது வளர்க்க செய்வதாகவும் காலித் சமத் கூறினார்.

ஜோகூர், உலு திராம்-மில் போலீஸ் நிலையத்தின் மீதான தாக்குதல், ஆயுதம் ஏந்திய ஆடவர் இஸ்தானா நெகாரா-வுக்கு செல்ல முற்பட்டது போன்ற பல சம்பவங்கள் நாட்டில் அண்மையக் காலத்தில் அரங்கேறியுள்ளன.

குறுகிய மத சிந்தனை அல்லது இனவாத விவகாரங்களை எழுப்பும் தரப்பினரால் நாட்டில்,இனங்களுக்கு இடையில் மோதல்கள் ஏற்பட்டு விடுமோ என அமானா கட்சி ஐயுறுகின்றது

கொலை மிரட்டல் விடுக்கின்றவர்கள் அல்லது வன்முறை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக போலீஸ் கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். அப்போதுதான், அது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதிபடுத்த முடியும்.

அதேவேளையில், நாட்டில் இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையை சீர்க்குலையாமல் இருக்க, அனைத்து தரப்பினரும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் எனவும் காலித் சமத் வலியுறுத்தினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்