இவ்வாண்டு 710 குழந்தைகள் காணாமல் போயுள்ளனர்

இவ்வாண்டு தொடக்கம் முதல் நவம்பர் மாதம் வரையில் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் 710 பேர் காணாமல் போயிருப்பதாக புக்கிட் அமான் குழந்தைகள், மகளிர், பாலியல் குற்றப் புலனாய்வுப் பிரிவின் துணை இயக்குநர் அசிஸ்தன் கமிஷனர் சித்தி கம்சியா ஹாசன் தெரிவித்தார்.

அந்த எண்ணிக்கையில் 634 பேர் மீண்டும் கிடைத்து விட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். இன்னும் 76 பேர் கண்டுபிடிக்கப்படவில்லை.

குழந்தைகள் காணாமல் போவதற்கு 6 முக்கியக் காரணங்களை காவல் துறையின் ஆய்வு கூறுகிறது. பெற்றோர்களின் கட்டுப்பாட்டில் இருந்து விடுபட வேண்டும் எனும் நோக்கில் சிறுவர்கள் அவ்வாறான முடிவை எடுக்கிறார்கள் என சித்தி கம்சியா ஹாசன் குறிப்பிட்டார்.

இந்த முடிவை எடுக்க, நண்பர்களைப் பின்பற்றுவது, காதலிப்பவரைப் பின்பற்றுவது குடும்பத்தாருடன் தவறான புரிதல் ஏற்படுவது, கல்வியில் நாட்டம் இல்லாமை போன்ற காரணங்கள் கூறப்படுகிறது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்