35 ஆயிரம் Flysiswa விண்ணப்பங்கள் பெறப்பட்டன

பொது உயர்க்கல்விக் கூடத்தில் பயிலும் 50,096 மாணவர்களில் 72 விழுக்காட்டினர், அதாவது 35,994 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

இன்னும் 14,000 மாணவர்கள் 300 வெள்ளி மதிப்புள்ள டிஜிட்டல் பற்றுச் சீட்டுகள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்களாக இருந்தும் இன்னும் அவர்கள் விண்ணப்பிக்கவில்லை என்றும், விண்ணப்ப காலம் டிசம்பர் 31 ஆம் தேதி வரை முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

தீபகற்ப மலேசியா, சபா, சரவாக், லாபுவான் இடையே உள்நாட்டு வான் பயணச் சீட்டுகளை வாங்குவதற்கு, தகுதியுடைய ஒவ்வொரு மாணவருக்கும் விமான நிறுவனம் 300 வெள்ளி மதிப்பிலான டிஜிட்டல் பற்றுச் சீட்டுகள் வழங்குவதை உள்ளடக்கிய credit shell முறையின் மூலம் FLYsiswa திட்டம் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் நடப்புக்கு வந்தது.

பாலிடெக்னிக், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, மெட்ரிகுலேஷன் மாணவர்களுக்கு இந்த FLYsiswa விரிவுபடுத்தப்பட்டு முழுமையாகப் பயன்படுத்தப்படும் வகையில் மாணவர்கள் தங்கள் பயணங்களை நன்கு திட்டமிட வேண்டும் என்று அந்தோணி லோக் பரிந்துரைத்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்