இஸ்ரேலுடன் தொடர்புபடுத்தப்படும் பொருட்களைப் புறக்கணிப்பதில் எல்லை மீறாதீர்

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 16-

இஸ்ரேலுடன் தொடர்பு படுத்தப்படும் பொருட்களை புறக்கணிக்கும் நடவடிக்கைகளில் ஒழுக்கத்தை மீறி யாரும் செயல்படக்கூடாது. மாறாக, சட்டத்தின் அடிப்படையிலேயே அந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டுமென கூட்டரசு பிரதேச முப்தி லுக்மான் அப்துல்லாஹ் வலியுறுத்தினார்.

பொருட்களை புறக்கணிப்பது ஒவ்வொரு பயனீட்டாளர்களைப் பொறுத்ததாகும். அவ்வாறு செய்யும்படி யாரையும் வற்புறத்தக்கூடாது. காரணம், ஒவ்வொருவரும் ஒரு மதிப்பீட்டைக் கொண்டுள்ளனர். குறிப்பாக, வாசிப்பின் அடிப்படையில் தகவல் மற்றும் உண்மைகளை மதிப்பீடு செய்து அவர்கள் செயல்படுவதை லுக்மான் அப்துல்லாஹ் சுட்டிக்காட்டினார். சமூகத்தினர் தங்களின் ஒழுக்கத்தை பேணி நடப்பது அவசியம் என்றாரவர்.

அண்மையில், KFC, McDonald’s-சில் உணவுகளை வாங்கிய நபரை நாய் என விமர்சிக்கும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவலானது. குவாந்தான், சுங்காய் ஈசாப்-பிலுள்ள McDonald’s உணவகத்தின் வாடிக்கையாளருக்கு கொலை மிரட்டல் கொடுக்கப்பட்டது தொடர்பில், ஐவர் கைதாகியுள்ளதைச் சுட்டிக்காட்டி முப்தி அவ்வாறு கருத்துரைத்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்