இஸ்ரேல் ஆடவருக்கு எதிரான தடுப்புக்காவல் நீட்டிப்பு

கோலாலம்பூர், ஏப்ரல் 06-

கோலாலம்பூர், ஜாலான் அம்ப்பாங்- கில் உள்ள ஒரு ஹோட்டலில் 6 துப்பாக்கிகள் மற்றும் 200 தோட்டாக்களுடன் பிடிபட்ட இஸ்ரேலிய நாட்டைச் சேர்ந்த ஆடவரின் தடுப்புக்காவலை, நீட்டிப்பதற்கு விண்ணப்பம் செய்யப்படும் என்று போலீஸ் படைத்தலைவர் டான் ஸ்ரீ ரசாருதீன் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டின் கடப்பிதழை பயன்படுத்தி நாட்டிற்குள் நுழைந்துள்ள ஷாலோம் ஆவிதான் என்று அடையாளம் கூறப்பட்ட 38 வயதுடைய அந்த இஸ்ரேலிய ஆடவரின் தடுப்புக்காவலுக்கான காலக்கெடு, நாளை ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைகிறது என்று ஐஜிபி குறிப்பிட்டார்.

நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக நம்பப்படும் முதன்மை சந்தேகப்பேர்வழியான அந்த இஸ்ரேலிய ஆடவர், கடந்த மார்ச் 27 ஆம் தேதி முதல் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஒரே நபர், எதற்காக தன் வசம் ஆறு துப்பாக்கிகளையும், 200 தோட்டாக்களையும் வைத்திருந்தார் என்பதற்கான காரணத்தை போலீசார் தொடர்ந்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருவதாக டான் ஸ்ரீ ரசாருதீன் ஹுசைன் தெரிவித்தார்.

அந்த இஸ்ரேலிய ஆடவருக்கு துப்பாக்கிகளை விநியோகித்த ஒரு தம்பதியர் உட்பட இதுவரையில் 16 பேர் கைது செய்யப்பட்டு, தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் ஐஜிபி மேலும் விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்