இஸ்லாத்தை அவமதிக்கும் வகையில் வெளியிடப்பட்டிருந்த ரசீது குறித்து நான்கு பேர் கைது

பினாங்கு, மே 23-

பினாங்கு, கெனாரி அவென்யூ -வில் உள்ள பீட்சா சங்கிலி உணவக ஒன்றில் வாடிக்கையாளரின் ஆர்டர் ரசீட்டில் இஸ்லாத்தை அவமதிக்கும் வகையில் காணப்பட்ட வாக்கியம் தொடர்பாக மியான்மாரை சேர்ந்த தம்பதியர் உட்பட நால்வரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த மே 16 ஆம் தேதி பினாங்கு, சுங்காய் ஆரா -வில் உள்ள ஒரு டுரியான் தோட்டத்தில் 19க்கும் 67 க்கும் இடைப்பட்ட வயதுடைய மூன்று மியன்மார் பிரஜைகள் மற்றும் ஓர் உள்ளூர் ஆணும் கையும் களவுமாக பிடிப்பட்டதாக பினாங்கு போலீஸ் தலைவர் டத்தோ ஹம்சா அகமது தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட மூன்று அந்நிய பிரஜைகள் வருகின்ற ஜூன் 3 ஆம் தேதி வரையில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருப்பதுடன் சந்தேகிக்கும் உள்ளூர் நபரின் தடுப்பு காவல் கடந்த திங்கட்கிழமை முடிவடைந்த வேளை அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாக ஹம்சா அகமது இன்று கூறினார்.

இதுவரையில், இச்சம்பவம் குறித்து 17 புகார்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து கிடைக்க பெற்றதை தொடர்ந்து அந்நபர்கள் கைது செய்யப்பட்டதாக ஹம்சா அகமது மேலும் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்