மாற்றுத்திறனாளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக அரசு ஊழியர் மீது குற்றச்சாட்டு

கோத்தா பாரு, மே 23-

மாற்றுத்திறனாளி மாணவி ஒருவரை பள்ளியின் கழிப்பறையில் பாலியல் பலாத்காரம் செய்ததாக அரசு ஊழியர் ஒருவர் கோத்தா பாரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றச்சாட்டப்பட்டார்.

42 வயது முக்பர்னிசான் முக்தார் என்கிற அந்த அரசு ஊழியர் நீதிபதி நிக் ஹப்ரி முகமது முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது அக்குற்றத்தை அவர் ஒப்புக் கொள்ளவில்லை.

குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டுகள் சிறை மற்றும் பிரம்படி விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 14(a) பிரிவின் கீழ் அவ்வாடவர் குற்றச்சாட்டப்படுவார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் 24 ஆம் தேதி காலை 9 மணியளவில் கோத்தா, செக்கோலா மெனெங்கா கெபாங்சான் -னில் 14 வயது மாற்றுத்திறனாளி மாணவியை பள்ளியின் கழிப்பறையில் பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்