உணவக நிர்வாக இயக்குநருக்கு 15 ஆயிரம் வெள்ளி அபராதம்

மேலக்கா, மார்ச் 27-

தனது உணவகத்தில் அனுமதிக்கப்பட்ட உதவித்தொகைக்குரிய அத்தியாவசியப் பொருட்களை விட அதிகமான பொருட்களை பதுக்கி வைத்திருந்த நாசி கன்டார் உணவகத்தின் நிர்வாக இயக்குநர் ஒருவருக்கு மலாக்கா, ஆயர் குரோ செஷன்ஸ் நிதிமன்றம் இன்று 15 ஆயிரம் வெள்ளி அபராதம் விதித்தது.

நாசி கன்டார் RB பிஸ்ட்ரோ என்ற உணவகத்தின் நிர்வாக இயக்குநரான 66 வயது ஜாலான், பேக்கெட் சமையல் எண்ணெய், சீனி போன்ற உதவித் தொகைக்குரிய அத்தியாவசியப் பொருட்களை அளவுக்கு அதிகமாக தனது உணவகத்தில் பதுக்கி வைத்திருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி காலை 11.45 மணியளவில் மலாக்கா, அலோர் காஜா, பூசாட் பெர்நியாகாண் ஜெலாத்தாங், ஜாலான் பெர்நியாகாண் ஜெலாத்தாங் 2, KM 37-1 என்ற முகவரியில் உள்ள RB பிஸ்ட்ரோ என்ற உணவகத்தில் இக்குற்றத்தை புரிந்ததாக ஜாலான் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் 10 லட்சம் வெள்ளி அபராதம் அல்லது மூன்று ஆண்டு சிறைத் தண்டனை அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் 1961 ஆம் ஆண்டு விநியோக கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் ஜாலான் குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருந்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்