லொள்ளு சபா டூ சினிமா, காமெடி நடிகர் சேஷுவின் சினிமா பயணம்.

இந்தியா, மார்ச் 27-

கடந்த 15-ம் தேதி மாரடைப்பு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேஷு அனுமதிக்கப்பட்டார். அவரது இதயத்தில் அடைப்பு இருப்பதாக கூறப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷு செவ்வாய்க்கிழமை காலமானார். அவருக்கு வயது 60.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘லொள்ளு சபா’ நிகழ்ச்சியில் நடித்து பிரபலமானவர் சேஷு.

இதனால், லொள்ளு சபா சேஷு என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டார். சந்தானம் உள்பட பலரது படங்களில் தொடர்ந்து நகைச்சுவை வேடங்களில் சேஷு நடித்து வந்தார். சமீபத்தில் வெளிவந்த ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தில் குடிகார பூசாரியாக சேஷுவின் நடிப்பு அனைவரையும் சிரிக்க வைத்தது.

கடந்த 15-ம் தேதி மாரடைப்பு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேஷு அனுமதிக்கப்பட்டார். அவரது இதயத்தில் அடைப்பு இருப்பதாக கூறப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தது. கடந்த சில நாட்களாக வென்டிலேட்டர் உதவியுடன்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.

சேஷுவின் இயற்பெயர் லட்சுமி நாராயணன். லொள்ளு சபா நிகழ்ச்சியால் பிரபலமான இவர் வீராப்பு, ஐந்தாம் படை, ஒரு கல் ஒரு கண்ணாடி, பாரிஸ் ஜெயராஜ், ஏ1, டிக்கிலோனா, திரௌபதி உள்பட பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார். வடக்குப்பட்டி ராமசாமியில் இவரது நகைச்சுவை நடிப்பு அனைவராலும் ரசித்துப் பாராட்டப்பட்டது.

நகைச்சுவை நடிகராக இப்போதுதான் சேஷு திரைப்படங்களில் பிரபலமாக ஆரம்பித்திருந்தார். அதற்குள் மரணம் அவரை தழுவிக் கொண்டது சோகம். மறைந்த சேஷுவுக்கு மனைவி, அபிலாஷ், அனிருத், பரத் ஆகிய மகன்கள் உள்ளனர்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்