உணவின் விலை அதிகரிப்பு: 11 விசாரணை ஆவணங்கள் திறக்கப்பட்டன

கோலாலம்பூர், மார்ச் 114 –

கடந்த மார்ச் 12 ஆம் தேதி முதல் இரண்டு நாட்களாக மேற்கொள்ளப்பட்ட ஓ.பி.ஸ் பந்தாவ் திடீர் சோதனையின் போது மொத்தம் 3,099 வளாகங்கள் சோதனையிடப்பட்டன.

இந்த சோதனையை தொடர்ந்து இலாபம் ஈட்டுதல் குறித்து ஆறு வழக்குகள் உட்பட 11 விசாரணை ஆவணங்களை திறந்துள்ளதாக உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கை செலவினங்களின் அமைச்சகம் அறிவித்துள்ளது.

பொருட்களுக்கு வழங்கப்படும் விலைகளை குறித்து பதிலளிக்கவும், கருத்துக்களை தெரிவிப்பதற்கும் சம்பந்தப்பட்ட வணிகர்களுக்கும் தனது தரப்பு நோட்டீஸ்களை அனுப்பியுள்ளதாக உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவினங்களின் அமைச்சர் டத்துக் அர்மிசான் மொகமாட் அலி தெரிவித்தார்.

இச்சோதனை பசார் ரமாடான் னை மட்டும் பொருந்தாமல் அனைத்து மளிகைக்கடைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றையும் உள்ளடக்கி இருப்பதாக அர்மிசான் மொகமாட்கூறினார்.

ரமடான் மற்றும் அய்டிபித்ரி மாதம் முழுவதும் இலாபம் மட்டுமே ஈட்டும் நோக்கத்தில் வியாபாரம் செய்வதை தடுப்பதற்காக இச்சோதனை மேற்கொள்ளப்படுவதாக இன்று நாடாளுமன்றத்தில் அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்