எல்லை தாண்டும் குற்றங்களை குறைக்க ESSCOM உத்தரவாதம்

சபா, மார்ச் 14 –

கிழக்கு சபா பாதுகாப்பு மண்டலத்தில் அடிக்கடி நிகழ்கின்ற எல்லை தாண்டிய குற்றப்பதிவுகளை குறைப்பதற்கு எஸ்ஸோம் எனப்படும் சபா கிழக்கு கரையோர சிறப்பு பாதுகாப்பு பகுதி உத்தரவாதம் அளித்துள்ளது.

எஸ்ஸோம் என்பது படையெடுப்பு அல்ல என்பதை உறுதி செய்வதுடன் எல்லை தாண்டிய குற்றவாளிகள், குற்றங்களை செய்வதற்காக கிழக்கு சபா பாதுகாப்பு மண்டலத்தை பயன்படுத்திக் கொள்வதாக சபா கிழக்கு கரையோர சிறப்பு பாதுகாப்பு பகுதியின் தலைவர் டத்துக் விக்தோர் சன்ஜோன்ஸ் தெரிவித்தார்.

நாட்டின் பாதுகாப்பினை உறுதி செய்வதுடன் எல்லை தாண்டிய குற்றங்களை குறைப்பதற்கு எஸ்ஸோம் உத்தரவாதம் அளிப்பதாக விக்தோர் சன்ஜோன்ஸ் கூறினார்.

இதில், கடத்தல் அல்லது படையெடுப்பு நேரடியாகவே அகற்றப்பட முடியும் என்கிற வேளையில் எல்லை தாண்டுகின்ற குற்றத்தை கையாள்வது சுலபம் இல்லை; சற்று கடினம்தான் என்று அவர் குறிப்பிட்டார்.

கிழக்கு கரையோர பகுதியில் வாழும் மக்களின் நலனையும் பாதுகாப்பினையும் கருத்தில் கொள்வதுடன் அவர்களுக்கு சிறந்த காவலர்களாக செயல்பட்டு தகவல்களை வழங்குவதுதான் எங்களின் பிரதான நோக்கங்களின் ஒன்றாகும் என்றார் விக்தோர் சன்ஜோன்ஸ் .

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்