கோழிக்கடையில் பிறந்த குழந்தையை கைவிட்டு சென்றதாக தம்தியர் மீது குற்றச்சாட்டு

சுக்காய், மே 23-

பிறந்த ஒரு வார ஆண் குழந்தையை கோழி விற்பனைக் கடை ஒன்றில் கைவிட்டு சென்றதாக கணவன் மனைவி இருவர் சுக்காய் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நேற்று குற்றச்சாட்டப்பட்டனர்.

24 வயது முஹம்மது அல்ஹாஃபிஸ் முக்மினின் முகமது நூர் மற்றும் 21 வயது நூர் ஐஸ்யா அஜிலா ஜைருல் அக்மல் ஆகிய அந்த தம்பதியர் நீதிபதி வான் சுஹைலா முகமது முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது அக்குற்றத்தை அவர்கள் ஒப்புக் கொண்டனர்.

குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 50,000 வெள்ளி அபராதம் அல்லது 20 ஆண்டுகள் சிறை அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 31(1) (a) மற்றும் 34 ஆகிய பிரிவுகளின் கீழ் அவர்கள் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

கடந்த மே 20 ஆம் தேதி சுக்காய் , ஜாலான் ஆயேர் புத்தேஹ், புக்கிட் ஜாபூர் குபுர் -ரில் உள்ள கோழிக்கடையில் இக்குற்றத்தை புரிந்திருப்பதாக அவர்கள் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்