உயர்க்கல்விக் கூட மாணவர்கள் மலாய், ஆங்கில மொழியில் புலமை பெற வேண்டும் ! வலியுறுத்தினார் பிரதமர்

 

கோலாலம்பூர், ஜன – 5,

 

உயர்க்கல்விக் கூட மாணவர்கள் ஆங்கில மொழ்யிலும் மலாய் மொழியிலும் புலமை பெற உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராகிம் மீண்டும் வலியுறித்தியுள்ளார். தற்காலத் தேவையைக் கருத்தில் கொண்டு இந்த முயற்சி எடுக்கப்படும் என அவர் கூறினார்.

ஒரு நாடு உள்ளூர் மொழியில் தேர்ச்சி பெற்றால், அது தேசிய அடையாளத்தை உருவாக்குவது மட்டுமல்லாமல், மறைமுகமாக பிற மொழிகளின் தேர்ச்சிக்கும் வழிவகுக்கும் என்று அவர் கூறினார்.

மலாய் மொழியின் தேர்ச்சி முக்கியம் எனவும், உள்ளூர் மாணவர்கள் உட்பட இது ஒரு கொள்கையாக ஏற்றுக்கொள்ளப்பட்டால், அது நாட்டின் பெருமையை வலுப்படுத்தும். அதில் தேர்ச்சி பெற்று விரும்பியதைச் செய்யலாம் என்றார் பிரதமர்.

ம்லாய் மொழியில் தேர்ச்சி பெற்றால், மறைமுகமாக ஆங்கிலத்திலும் தேர்ச்சி பெற்று விட முடியும். இதற்கான முயற்சியை உடனடியாகட் தொடங்க வேண்டும் என்றார்.

தாய்லாந்து நாட்டை சுட்டிக் காட்டி பேசிய பிரதமர், அங்குள்ள மக்கள் எல்லோரும் தாய்லாந்து மொழியில் சரளமாகப் பேசிவார்கள். தற்பொழுது ஆங்கில மொழியிலும் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்கிறார்கள். அதற்குக் காரணம் அங்குள்ள பல்கலைக்கழகங்களில்  ஆங்கில மொழிக் கல்வி கொள்கை எனக் குறிப்பிட்டார் அன்வார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்