1.8 மில்லியன் பேர் PADUவில் பதிய பேரா இலக்கு

 

ஈப்போ, ஜன – 5,

 

தனிநபர்கள் மற்றும் குடும்ப வருமானம் தொடர்புடைய தகவல்களை சேகரிக்கும் தேசிய பதிவுத் திட்டமான PADU வில் 1.8 மில்லியன் பேர் பதிந்து கொள்ள பேரா மாநில அரசாங்கம் இலக்கு கொண்டுள்ளதாக தொடர்புத் துறை, பல்லூடகம், அரசு சாரா அமைப்புகளுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முக்ம்மட் அஸ்லான் ஹெல்மி தெரிவித்துள்ளார்.

 அத்திட்டம் அறிமுகமான ஜனவரி 2ஆம் தேதியன்௶உ 5 ஆயிரத்து 655 பேர் பதிந்து கொண்டதாகத் தெரிவித்த அவர், புள்ளிவிவர இலாகா தகவலின் அடிப்படையில் தற்போது அதிகமான பதிவுகள் கொண்ட பட்டியலில் பேரா 3 வது இடத்தில் இருப்பதாகக் குறிப்பிட்டார்.

1.8 மில்லியன் பேர் எனும் 100 சதவிகித இலக்கை அடைய பல்வேறு முயற்சிகளை பேரா அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது.

இந்த விவகாரம் தொடர்பில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தெளிவுரை கொடுக்கப்பட்டு பதிவை அதிகரிக்கவும் மக்களுக்குத் தகவல்களை மிக விரைவில் கொண்டு சேர்ப்பதற்கும் வழி வகை காணப்படும் என்றார்.

 

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்