உயர் மின் அழுத்தம் உடைய கோபுரத்தில் ஏறிய ஆடவர்,பேச்சுவார்த்தைக்கு பின்னர் கீழே இறங்கினார்.

கெடா, மே 21-

கெடா, ஜித்ரா-வில் ஸ்பைடர்மேன் போன்ற நினைப்பில் உயர்மின் அழுத்தம் உடைய கோபுரத்தில் ஏறி, கீழே இறங்க மறுத்த ஆடவரால் பரபரப்பு ஏற்பட்டது.

நேற்று மாலையில், பண்டார் டாருல் ஆமான், கம்போங் முஹிபா-பில் நிகழ்ந்த அச்சம்பவத்தில், தெனாகா நேஷனல் நிறுவனத்துக்கு சொந்தமான 25 மீட்டர் உயரத்திலான கோபரத்தின் மேல் ஏறிய அவ்வாடவரை, கீழே இறங்குமாறு, பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் அவர் செவிசாய்க்கவில்லை.

இரவு மணி 7.17 அளவில் அவசர அழைப்பை பெற்ற ஜித்ரா தீயணைப்பு மீட்பு படையினர் அவ்விடம் விரைந்ததோடு, அந்த கோபுரத்தின் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

பின்னர், அவ்வாடவரிடம் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையின் பலனாக, இரவு மணி 8.43 வாக்கில் அவர் கீழே இறங்க சம்மதித்தார்.

பின்னர், மேல்கட்ட நடவடிக்கைகாக, அவர் போலீசிடம் ஒப்படைக்கப்பட்டதாக, ஜித்ரா தீயணைப்பு மீட்பு நிலையத்தின் தரப்பு தெரிவித்தது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்