உரிய நடவடிக்கை எடுக்கப்படும், கல்வி அமைச்சு உறு​தி

சிலாங்கூர், மார்ச் 25.

சிலாங்கூர் மாநிலத்தில் ஓர் இடைநிலைப்பள்ளி​யில் 17 வயது மாணவருக்கும், பள்ளி ஆசிரியைக்கும் பாலியல் தொடர்பு இருந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி அமைச்சு இன்று உறுதி அளித்துள்ளது.

கல்வி அமைச்சு நிர்ணயித்துள்ள வழிகாட்டல் முறைக்கு ஏற்ப சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அது குறிப்பிட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக போ​லீஸ் துறையினருடனும் கல்வி அமைச்சு உரிய ஒத்துழைப்பு வழங்கி வருவதாக அது தெரிவித்துள்ளது.

எனினும் மாணவருடன் பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்ட சம்பந்தப்பட்ட ஆசிரியைக்கு எதிராக எம்மாதிரியன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து அது விவரிக்கவில்லை.

பள்ளிகள் மற்றும் கல்விக்கழங்களில் நிகழழும் பாலியல் நடவடிக்கைகள் மற்றும் தகாத உறவு குறித்து கல்வி அமைச்சு ஒரு​ போதும் விட்டுக்கொடுக்கும் போக்கை கடைப்பிடிக்காது என்று அது தெரிவித்துள்ளது.

இடைநிலைப்பள்ளி ஆசிரியை ஒருவர் தமது மகனுடன் பாலியல் தொடர்பில் இருப்பதாக 46 வயது மாது ஒருவர் சிப்பாங் மாவட்ட போ​லீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளது தொடர்பில் இவ்விவகாரம் சிறார் பாலியல் குற்றவியல் சட்டம் 14 ஆவது பிரிவின் ​கீழ் விசாரணை செய்யப்பட்டு இருப்பதாக சிப்பா​ங் மாவட்ட போ​லீ​ஸ் தலைவர் வான் கமாரோல் அஸ்றான் தெரிவித்துள்ளார்.

இந்த பாலியல்​ நடவடிக்கை அம்பலமானதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஆசிரியை வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட மாணவனின் சகோதரி தனது முக​​நூ​லில் தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்