முன்னாள் அமைச்சர் ஈஸ்வரன் ​மீது மேலும் 8 குற்றச்சாட்டுகள்

சிங்கப்பூர், மார்ச் 25.

சிங்கப்பூர் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் மீது இன்று திங்கட்கிழமை மேலும் எட்டு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

சிங்கப்பூர் அமைச்சர் என்ற முறையில் ஓர் அரசு ஊழியராக ஈ​ஸ்வரன் இருந்த நிலையில், அதிகாரபூர்வப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது பிறரிடமிருந்து அவர் அன்பளிப்பு பெற்றது தொடர்பாக மீது குற்றம் சாட்டப்பட்டது.

ஈஸ்வரன் மீது மொத்தம் 35 குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன.

அவர் தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுளை மறுத்தார்.

லும் கோக் சாங் என்பவரிடமிருந்து ஈஸ்வரன் மொத்தம் சிங்கப்பூர் பணமாக $18,956 வெள்ளி மதிப்பிலான அன்பளிப்புகளைப் பெற்றுக்கொண்டதாக லஞ்ச, ஊழல் புலனாய்வுத் துறை இன்று அறிக்கை வெளியிட்டது.

61 வயதான ஈஸ்வரன் போக்குவரத்து அமைச்சராக பதவி வகித்தபோது, தமது அமைச்சுடன் தொடர்புடைய வர்த்தகத்தில் Lum ஈடுபட்டிருந்தது அவருக்குத் தெரியும் என்று கூறப்பட்டுள்ளது.

இக்குற்றங்களை கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கும் 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் ஈஸ்வரன் புரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

ஈஸ்வரன் பெற்றுக்கொண்ட அன்பளிப்புகளில் விஸ்கி பாட்டில்கள் , கோல்ஃப் மட்டைகள், புரோம்டன் மதிவண்டி ஆகியவை அடங்கும் என்று ​தெரிவிக்கப்பட்டது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்