நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 14 நாள் கால அவகாசம்

கோலாலம்பூர், மே 18-

பெர்சத்து கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கள் விசுவாசத்தை புலப்படுத்துவதற்கும், கட்சியின் உத்தரவை பின்பற்றி நடப்பதற்கும் அடுத்த 14 நாட்களுக்குள் தங்களின் உறுதிமொழியை வழங்குவதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் தெரிவித்துள்ளார்.

பெர்சத்து கட்சியின் உச்சமன்றத்தினால் வெளியிடப்பட்ட அந்த உத்தரவை அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும், சட்டமன்ற உறுப்பினகளும் பின்பற்றுவதுடன், கட்சிக்கு விசுவாசமாக இருப்பதை இதன்வழி உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டக்கொள்ளப்பட்டுள்ளதாக ஹம்சா ஜைனுடின் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்