உள்நாட்டு பச்சை அரிசியை அதிக இலாபத்திற்காக விலை உயர்த்தும் தரப்பினரை அரசாங்கம் தற்காக்காது

கோலாலம்பூர், மார்ச் 20-

உள்நாட்டு பச்சை அரிசியை அதிக இலாபத்தைப் பெறுவதற்காக விலையை விருப்பத்திற்கு ஏற்ப உயர்த்தும் தரப்பு உள்ளது கண்டறியப்பட்டால், அதில் சம்பந்தப்பட்டுள்ளவர்களை அரசாங்கம் ஒரு போதும் தற்காக்காது.

அதில் விட்டுக்கொடுக்கும் போக்கு என்ற பேச்சுக்கே இடமில்லை என விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் டத்துக் ஶ்ரீ மோகாமாட் சாபு திட்டவட்டமாக கூறினார்.

அவ்விவகாரத்தை கண்காணிப்பதற்கென மலேசிய போட்டியாற்றல் ஆணையம் – MyCC உள்ளது. இதற்கு முன்பு, கோழிகளுக்கான தீவனத்தில் அதிக இலாபத்தை பெறுவதற்காக விலைகளை உயர்த்திய நிறுவனங்கள் மீது அது நடவடிக்கையை எடுத்துள்ளது.

தற்போது, அரிசி விவகாரத்திலும் MyCC கண்காணிப்பை மேற்கொண்டு வரும் வேளை, அதிலும் அதிக விலைகளை நிர்ணயிக்கும் போக்கு கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் டட்த்துக் ஶ்ரீ மோகாமாட் சாபு கூறினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்