கோதுமை மாவுக்கான உதவித்தொகை இவ்வாண்டிலிருந்து நிறுத்தம்

ஷா அல்லாம், மார்ர்ச் 19 –

கோதுமை மாவுக்கான உதவித்தொகையை அரசாங்கம் இவ்வாண்டிலிருந்து நிறுத்தியுள்ளதாக உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கை செலவினங்களின் அமைச்சர் டத்துக் மொகமாட் அமிர்சாம் அலி இன்று மக்களவையில் தெரிவித்துள்ளார்.

உதவித்தொகை வழங்கப்பட்ட கோதுமை மாவை கிலோ ஒன்றுக்கு 1 வெள்ளி 45 காசு எனும் கட்டுப்பாட்டு விலையில் தருவிக்கும் ஆற்றலை அதன் உற்பத்தி தரப்பு கொண்டிருக்காததால், அம்முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.

மலேசியர்களின் சுமையைக் குறைப்பதில் உதவும் நோக்கிலேயே அரசாங்கம் ஆரம்பத்தில் உதவித் தொகை வழங்கி வந்ததைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், தகுதியுடைய இலக்கிடப்பட்ட மலேசியர்களுக்கு மட்டுமே பயன் பெறும் வகையில், உதவித்தொகைகளை வழங்குவதில் அரசாங்கம் மறுசீரமைப்பை தற்போது மேற்கொண்டு வருவதாக கூறினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்