உள்ளாடைகளை திருடும் நபர் தேடப்பட்டு வருகிறார்

பாலிக் புலாவ், மே 15-

வீட்டின் வெளியே உள்ள துணிக் கொடியில் உலறவைக்கப்பட்ட உள்ளாடைகளை அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் திருடி செல்லப்பட்டதாக பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பினாங்கு, சோலோக் தித்தி தெராஸ் -சில் உள்ள வீடொன்றில் இச்சம்பவம் குறித்து தமது தரப்புக்கு புகார் கிடைக்க பெற்றதாக மாவட்ட போலீஸ் தலைவர் கண்காணிப்பாளர் கமாருல் ரிசல் ஜெனல் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர் உலற வைத்த ஆடைகளை வெளியே சென்று பார்க்கும் போது அவ்விடத்தில் அவரின் உள்ளாடைகள் காணாமல் போனதை உணர்ந்து வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராவை ஆராய்ந்த வேளை நபர் ஒருவர் உள்ளாடைகளை திருடிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி செல்வதாக பதிவாகியிருந்ததாக கமாருல் ரிசல் கூறினார்.

இதுக்குறித்து குற்றவியல் சட்டம் 379 பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் சம்பந்தப்பட்ட நபரை போலீசார் தீவிரமாக தேடி வருவதாக கமாருல் ரிசல் தகவல் வெளியிட்டார்.

இச்சம்பவத்தை குறித்த ஒரு நிமிட காணொளி ஒன்று தற்போது X வலைத்தளத்தில் @NeGORi9 என்பவரால் பகிரப்பட்டு வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்