நால்வரை தடுப்பு காவலில் வைப்பதற்கு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர்

கிளாந்தான், மே 15-

கிளந்தானில் தோல்வியடைந்த குழாய் கிணறு திட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்டிருந்த அம்மாநில நீர் நிறுவனத்தின் இரண்டு முன்னாள் மூத்த அதிகாரிகள் உட்பட நான்கு பேரை தடுப்பு காவலில் வைத்து விசாரணை மேற்கொள்வதற்கு கோத்தா பாரு காம்ப்லெக்ஸ் நீதிமன்றத்திற்கு இன்று அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இத்திட்டத்தின் ஆலோசகர்களாக செயல்பட்ட இரண்டு மூத்த அதிகாரிகள் உட்பட நால்வருக்கு எதிராக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் அவர்களை தடுப்பு காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ளும் உத்தரவை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் பெற்று வருகிறது.

குற்றச்சாட்டப்பட்டிருக்கும் 40க்கும் 60க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த நால்வரை கோத்தா பாருவில் தனித்தனி இடங்களில் எஸ்.பி.ஆர்.எம் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருப்பதாக நேற்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

கோத்தா பாருவில் சீரான நீர் விநியோகம் கிடைக்காமல் பொதுமக்கள் அவதியுறும் சம்பவத்தை குறித்து புகார் பெறப்பட்டதை தொடர்ந்து அந்நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அரசு நிறுவனமான Air Kelantan Sdn Bhd மூலம் செயல்படத் தவறிய 10 குழாய் கிணறு திட்டங்களை எம்.ஏ.சி.சி சோதனையிட்டு வருவதாக அது ஓர் அறிக்கையில் நேற்று உறுதி செய்துள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்