வெப்ப தாக்குதல் பக்கவாதத்தில் 10 பேர் பாதிப்பு

திரெங்கானு, மே 15-

திரெங்கானுவில் கடந்த ஏப்ரல் மாதம் வரையில் மொத்தம் 10 பேர் வெப்ப தாக்குதல் பக்கவாதத்திற்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக, விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள் இதில் பாதிப்படைந்துள்ளனர்.

மாநிலத்திலுள்ள சுகாதார நிலையங்களில் சிகிச்சைக்கு வந்தபோது பாதிக்கப்பட்டவர்கள் இந்நோயால் பாதிப்படைந்திருப்பது கண்டறியப்பட்டதாக திரெங்கானு மாநில சுகாதாரத்துறையின் இயக்குநர் டத்தோ டாக்டர். காசெமனி எம்போங் தெரிவித்தார்.

தொழிலாளர்கள் அதிகமான நேரங்களில் வெயிலில் வேலை செய்வதை அடுத்து அவர்கள் இந்த பாதிப்புக்கு ஆளாகியிருப்பதாக காசெமனி எம்போங் கூறினார்.

தலைசுற்றல், குமட்டல்,வாந்தி போன்ற அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுவதுடன் இதை அலட்சியமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று காசெமனி எம்போங் வலியுறுத்தினார்.

உடலின் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமானால் நோயாளிகள் உடலில் நீரை இழக்க நேரிடுவதுடன் தசைப்பிடிப்பு, வெப்ப சோர்வு, வெப்ப தாக்குதல் பக்கவாதம் ஏற்படும் அபாயம் இருப்பதாக காசெமனி எம்போங் எச்சரித்தார்.

இந்த வெப்ப தாக்குதல் பக்கவாதம் வயதானவர்களுக்கும் குழந்தைகளுக்கும் மிக ஆபத்தான ஒன்று காரணம் இது மரணத்திற்கு வழிவகுக்கக்கூடிய ஒன்றாகும் என்று அவர் மேலும் அறிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்