உள்ளூர் பானத்திற்கு மாடலாக காட்சியளிக்கும் கைரி ஜாமாலுடின்

ஷா அலாம், மார்ச் 14 –

உள்ளூர் வானொலி நிறுவனமான ஹோட் ப்ம் மில் தொகுப்பாளராக இருந்த கெ.ஜெ என்றழைக்கப்படும் கைரி ஜாமாலுடின் அபு பாகார் ரின் அடுத்த அவதாரம். உள்ளூர் தயாரிப்பிலான பானத்திற்கு அவர் ஒரு மாடலாகியுள்ளார்.

அதுமட்டுமின்றி, சுகாதார முன்னாள் அமைச்சருமான கைரி ஜாமாலுடின் நோன்பு பெருநாளுக்கான ஆடைகளுக்கு பிரபலமாக விளங்கும் உள்நாட்டை சேர்ந்த உடை தயாரிப்பு நிறுவனம் ஒன்றுக்கு மலாய் ஆடையை அணிந்தவாறு காட்சியளித்துள்ளது சமூக ஊடக வாசிகளிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.

இதற்கு முன்பு, உணவக ஒன்றின் வர்த்தகத்தைப் பிரபலப்படுத்தும் வகையில் உணவு அனுப்பநராக நடித்திருந்த காணொலியை, கைரி ஜாமாலுடின் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தது பரவலாகியிருந்தது.

அம்னோவின் தகவல் பிரிவு முன்னாள் தலைவர் ஷாஹ்ரில் சுபியான் ஹாம்டான் னுடன் அவர் பொட்காஸட் ட்டில் விவாதங்களையும் நடத்தி வருகின்றார்.

3 தவணைகள் ரெம்பாவ் நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பு வகித்துவந்த கைரி ஜாமாலுடின் கடந்த 15ஆவது பொதுத்தேர்தலில், தேசிய முன்னனி சார்பில் சுங்கை பூலோ நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு, பக்காத்தான் ஹாராப்பான் ன்னைச் சேர்ந்த ர்.ராமானான் னிடம் தோல்வியைத் தழுவினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்