பெர்சாத்து விலிருந்து இன்னும் அதிகமான தலைவர்கள் பி.கெ ர் ரில் இணைவார்கள்!

ஷா ஆலாம், மார்ச் 14 –

இவ்வாண்டு இறுதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் பி.கெ.ர் கட்சி தேர்தலில், போட்டியிடும் எண்ணத்தைத் தாம் கொண்டிருக்கவில்லை என அதில் இணைந்துள்ள பெர்சத்து கட்சியின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான டாக்டர் முகமாட் பாயிஸ் னாமான் தெரிவித்தார்.

கட்சியில் ஒருவர் குறைந்தது 18 மாதங்கள் உறுப்பினராக இருந்த பின்னரே, போட்டியிடுவதற்கான தகுதியைப் பெறுவார் என்பதை தாம் அறிந்துள்ளதால், தற்போதைக்கு எந்தவொரு பதவிகளுக்கும் போட்டியிடும் எண்ணம் இல்லை.

தேவை ஏற்படுமாயின், பி.கெ.ர் ரின் தேர்தல் பணிப்படையுடன் களத்தில் இறங்கி, தகவல் சார்ந்த சுற்றுப்பயணத்தில் பங்கேற்க தாம் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

நேற்று ஷா ஆலாமில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் டாக்டர் முகமாட் பாயிஸ் னாமான் , பி.கெ.ர் கட்சியில் இணைந்ததை சிலாங்கூர் மந்திரி பெசார் டத்துக் ஶ்ரீ அமிருடின் ஷாரி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இந்நிலையில், பெர்சாத்து கட்சியைத் தோற்றுவித்த தலைவர்கள் உள்பட அனைத்து நிலைகளிலான அதிகமான தலைவர்கள் பி.கெ.ர் ரில் இணையவுள்ளதாக டாக்டர் முகமாட் பாயிஸ் னாமான் குறிப்பிட்டார்.

கடந்த புதன்கிழமை செலாட் கிள்ளாங் சட்டமன்ற உறுப்பினர் அப்து; ராஷிட் அசாரி சிலாங்கூர் மந்திரி பெசாரின் தலைமைத்துவத்திற்கு ஆதரவளித்தது வெறும் தொடக்கம் மட்டுமே.

பெர்சாத்து கட்சியின் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள சூழலில், குறிப்பிட்ட குழுவினரால் கட்சிக்காக உழைத்தவர்கள் நிராகரிக்கப்படுகின்ற சாத்தியம் உள்ளதால் அவர்கள் பி.கெ.ர் ரில் இணைவார்கள் என டாக்டர் முகமாட் பாயிஸ் னாமான் அந்நிகழ்ச்சியில் கூறினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்