விமான நிலையங்களின் தரம் உயர்த்தப்பட வேண்டும்! பாத்திக் ஏர் கோரிக்கை

கோலாலம்பூர், மார்ச் 14 –

KLIA எனப்படும் அனைத்துலக விமான நிலையங்களில் வழங்கப்படும் சேவைகளின் தரம் மிக சிறப்பாக இருக்கவேண்டுமென பாத்திக் ஆயேர் விமான நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.

KLIA, KLIA 2 உட்பட இதர விமான நிலையங்களிலிருந்து புறப்படும் அனைத்து அனைத்துலக விமான பயணங்களுக்கான பயணிகள் சேவைக் கட்டணத்தை ஜூன் 1ஆம் தேதி முதல் 35 ரிங்கிட்டிலிருந்து 73 ரிங்கிட்டாக மலேசிய வான் போக்குவரத்து ஆணையம் – மாவ்கோம் தரநிலைப்படுத்தியுள்ளது.

அதனை சுட்டிக்காட்டி பாத்திக் அயேர் விமான நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ சந்திரன் ராமமூர்த்தி வலியுறுத்தினார்.

குறிப்பாக, பயணிகளுக்கு நிறைவான சேவை கிடைத்திட, சம்பந்தப்பட்ட விமான நிலையங்களில் நிலவும் இட நெரிசல் விவகாரத்திற்கு தீர்வு காணப்பட வேண்டும் எனவும் அவர் தமது எதிர்பார்ப்பை முன்வைத்தார்.

ஜூன் 1ஆம் தேதி தொடங்கி அதற்கு பிந்தைய பயணங்களுக்கான டிக்கெட்டுகள் ஜூன் 1ஆம் தேதிக்கு முன்பதாக வெளியிடப்பட்டாலும், தற்போது அமலுக்கு வந்துள்ள கட்டண உயர்வு, அதற்கு எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

காரணம், அது நடப்பு கட்டண விகிதத்தை உட்படுத்தியுள்ளது எனவும் டத்தோ சந்திரன் ராமமூர்த்தி சுட்டிக்காட்டினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்