எங்களின் கருத்துகளையும் ஏற்றுக் கொள்ளுங்கள்

கோலாலம்பூர், ஜன – 7,

பாடத்திட்டங்களை உருவாக்கும் விவகாரங்களின் தங்களின் கருத்துகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என உயர்க்கல்விக் கூடங்களை தொழில்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இவ்விவகாரம் குறித்து கருத்துரைத்த PKT Logistic Group Sdn Bhd இன் தலைமைச் செயல்முறை அத்காரி ஐக்கல் டியோ தெரிவிக்கயில், சம்பந்தப்பட்டத் தொழில்துறையினர் தங்கள் துறை சார்ந்து நல்ல கருத்துகளைக் கொண்டுள்ளனர். கல்விப் பாடத்திட்டத்திற்கும் தொழில்துறையின் உண்மையான தேவைகளுக்கும் இடையில் பொருந்தாதவற்றைத் தவிர்க்க உயர்க்கல்விக் கூடங்களுக்குத் தங்களால் உதவ முடியும் என்றார். இதனால், பட்டதாரிகள் தங்கள் திறன்களை சந்தைப்படும் ஆற்றல் கொண்டவர்களாக உருவாக இயலும் என்றார் அவர்.

துறை சார்ந்த தேவைகளின் அடிப்படையில் உயர்க்கல்விக் கூடங்கள் பட்டதாரிகளை உருவாக்கி அனுப்ப இயலும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதே போல், தொழில்துறையின் தேவைக்கு ஏற்ப ஆய்வு சம்பந்தப்பட்ட விவகாரங்களில் உயர்க்கல்விக் கூடங்கள் கவனம் செலுத்த வேண்டும்.

தொழில்துறையும் கல்விமுறையும் ஒருங்கிணைந்து ஒத்துழைப்பு நல்கி செயல்பட வேண்டும், இயர்க்கல்விக் கூட ஆலோசகர் மன்றத்தில் துறை சார்ந்தவர்கள் இடம் பெற வேண்டும் எனவும் மைக்கல் டியோ குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்