எதிர்க்கட்சியினரின் ஆட்சியை விட, நடப்பு அரசாங்கத்தில் பொருட்களின் விலை மலிவாக உள்ளது!

புத்ராஜெயா, ஏப்ரல் 01 –

முந்தைய அரசாங்கங்களுடன் ஒப்பிடுகையில், நடப்பிலுள்ள ஒற்றுமை அரசாங்கத்தின் நிர்வாகத்தின் கீழ், அடிப்படை உணவு பொருட்களான கோழி, முட்டை, சமையல் எண்ணெய் ஆகியவற்றின் விலை இன்னமும் குறைவாகவும் நிலையாகவும் உள்ளதென பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

மக்களின் வாழ்க்கை செலவின அதிகரிப்பை எதிர்கொள்ள மடானி அரசாங்கம் ஒன்றும் செய்யவில்லை என கூறிவரும் சில தரப்பினரையும் நிதியமைச்சருமான அவர் சாடினார்.

2021, 2022,2022 ஆகிய ஆண்டுகளில் கோழி விலை கிலோ ஒன்றுக்கு 13 வெள்ளியாக இருந்தது. தற்போது, கிலோ ஒன்றுக்கு 9 வெள்ளி அல்லது 9 வெள்ளி 50 சென்னாக அது இருப்பதை யாரும் மறந்துவிடக்கூடாது.

இப்பொழுது உள்ள எதிர்க்கட்சியினர் அரசாங்கத்தை வழிநடத்திய போது, 5 கிலோ எடையிலான சமையல் எண்ணெய் 45 வெள்ளி முதல் 50 வெள்ளி வரையில் இருந்தது. தற்போது வெறும் 27 வெள்ளியாக உள்ளது. முன்பு, சந்தையில் முட்டை கையிருப்புக்கு தட்டுப்பாடு நிலவிய நிலையில், தற்போது, அத்தகைய சூழல் இல்லாததை எதிர்க்கட்சியினர் நினைவில் கொள்ள வேண்டும் எனவும் பிரதமர் நினைவுறுத்தினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்