பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு பாதயாத்திரை

மாரான்- மார்ச் 21

மாரான், ஶ்ரீ மரத்தாண்டவர் ஆலயத்தின் 93 ஆம் ஆண்டு பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு, பத்து மலை முருகன் திருத்தலத்திலிருந்து பகாங், மாரானை நோக்கி பாதயாத்திரை பயணம் இன்று வியாழக்கிழமை அதிகாலை 4 மணியளவில் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது.

பத்துமலை திருத்தலத்தின் பாதயாத்திரை கழகமான Selangor, Batu Caves மாரத்தான் கிளப் ஏற்பாட்டில் பெருநடை அரசாங்க சார்பற்ற அமைப்பின் ஒருங்கிணைப்பு மன்றத்தின் ஒத்துழைப்புடன் தொடங்கிய இந்த பாதயாத்திரை பயணத்தில் 120க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் ஹுலு சிலாங்கூர், கிள்ளான், பந்திங், கெடா மற்றும் பல இடங்களிலிருந்து பங்குக்கொண்டுள்ளனர்.

நான்கு நாட்களை உள்ளடக்கிய கோலாலம்பூரிலிருந்து மாரான் வரை 204 கிலோமீட்டர் தூரத்தைக் கொண்ட இந்தப் புனித பயணம் மூடா கட்சியின் சிலாங்கூர் மாநில துணைத்தலைவரும், உலுசிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதியின் மூடா கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான டாக்டர் R.சிவபிரகாஷ் தலைமையில் நடைபெற்றது.

17 ஆவது ஆண்டாக நடைபெறும் இந்நிகழ்வில் ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 24 ஆம் தேதிக்குள் ஆயிரக்கணக்கானோர் இந்த பாதயாத்திரை பயணத்தில் கலந்து கொண்டு ஶ்ரீ மரத்தாண்டவர் ஆலயத்தில் ஒன்றுக்கூடுவார்கள் என்று எதிர்பார்ப்பதாக டாக்டர் சிவபிரகாஷ் தெரிவித்தார்.

கிழக்கை நோக்கி ஓர் ஆன்மீக சிந்தனையுடன் மன வலிமையை உறுதிப்படுத்தக்கூடிய இந்தப் பாதயாத்திரை வெற்றிகரமாக நடைபெறவேண்டும் என்று டாக்டர் சிவபிரகாஷ் கேட்டுக் கொண்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்