எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு

கோலாலம்பூர், பிப்ரவரி 27 –

15 ஆவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடரை நேற்று அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்த மாமன்னர் சுல்தான் இப்ராஹிமிற்கு நன்றி தெரிவிக்கும் தமது உரையை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், மாலை நேரத்திற்கு ஒத்திவைத்ததற்கு ஆட்சேபம் தெரிவிக்கும் வகையில் எதிர்க்கட்சி நாடளுமன்ற உறுப்பினர்கள் இன்று அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

நாடாளுமன்றக்கூட்டத் தொடரின் இரண்டாவது நாளான இன்று செவ்வாய்க்கிழமை காலையில் நாடாளுமன்றக்கூட்டத் தொடர் தொடங்கிய போதே மாமன்னருக்கு நன்றி தெரிவிக்கும் உரையை பிரதமர் அன்வார் நிகழ்த்தியிருக்க வேண்டும். காலையில் நிகழ்த்த வேண்டிய உரையை மாலையில் நிகழ்ந்துவதற்கு பிரதமர் முற்படுவது நாடாளுமன்றம் இதுவரை கண்டிராத நடைமுறையாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஹம்சா சைனுடின் ஆட்சேபம் தெரிவித்தார்.

மாமன்னருக்கு நன்றி தெரிவிக்கும் உரையை பிரதமர் ஆற்றியப் பின்னரே அடுத்த கட்ட நிகழ்வுக்கு சென்று இருக்க வேண்டும் என்று பெரிக்காத்தான் நேஷனல் லாருட் எம்.பி.யான ஹம்ஸா ஜைனுதீன் குறிப்பிட்டார்.

எனினும் இதற்கு விளக்கம் அளித்த பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், இன்று காலையில் கம்போடியா பிரதமர் ஹன் மனெட் மலேசியாவிற்கு அதிகாரத்துவ வருகை மேற்கொண்டுள்ளார். அவரை வரவேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டியிருந்ததால் மாமன்னருக்கு நன்றி தெரிவிக்கும் உரை நிகழ்வை மாலை நேரத்தித்றகு மாற்றப்பப்பட்டதாக விளக்கம் தந்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்