பதின்ம வயதுடையவர்கள் சம்பந்தப்பட்ட கற்பழிப்பு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரிப்பு புக்கிட் அமான் அச்சம்

கோலாலம்பூர், பிப்ரவரி 27 –

நாட்டில் 16 வயதுக்கு கீழ்ப்பட்ட வயதுடையவர்கள் சம்பந்தப்பட்ட கற்பழிப்பு சம்வங்களின் எண்ணிக்கை கடந்த சில வருடங்களாக தொடர்ந்து அதிகரித்து வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் இயக்குநர் டத்தோ ஶ்ரீ மொஹாமட் ஷுஹைலி மொஹமட் சைன் தெரிவித்துள்ளார்.

இருவரின் இணக்கத்தின் பேரில், இந்த பாலியல் தொடர்புகள் ஏற்பட்ட போதிலும் சட்ட ரீதியான அம்சங்களில் அவை கற்பழிப்பு சம்பவங்களாகவே வகைப்படுத்தப்பட்டுள்ளன. காரணம், சம்பந்தப்பட்டவர்கள் வயது குறைந்தவர்களாக இருப்பதால் அவை குற்றவியல் சம்பவங்களாகவே கருது வேண்டியுள்ளது என்று மொஹாமட் ஷுஹைலி விளக்கினார்.

அரச மலேசிய போலீஸ் படையின் பதிவுகளின்படி, வயது குறைந்தவர்கள் சம்பந்தப்பட்ட கற்பழிப்பு சம்பவங்களின் எண்ணிக்கை, கடந்த 2022 ஆம் ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு 11.8 விழுக்காடு அதிகரித்துள்ளது. அதாவது கடந்த ஆண்டு மட்டும் வயது குறைந்தவர்கள் சம்பந்தப்பட்ட 202 கற்பழிப்பு சம்பவங்களை போலீசார் பதிவு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்

இதில் கவலையளிக்கும் செய்தி என்னவென்றால், இதில் சம்பந்தப்பட்டு இருப்பவர்கள் பெரும்பகுதியினர் பி40 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்று மொஹாமட் ஷுஹைலி விளக்கினார்.

வயது குறைந்த பிள்ளைகள் மீது பெற்றோர்கள் போதுமான கண்காணிப்பு கொண்டிருக்காதது, இணையத்தின் வாயிலாக அபாசப்படங்கள் தொடர்புடைய பாலியல் தன்மையிலான உள்ளடக்கங்கள் எளிதில் கிடைப்பது போன்றவை இத்தகைய சீர்கேடுகளுக்கு முக்கிய காரணமாக இருக்கின்றன என்று ஆய்வுக்ள காட்டுவதாகமொஹாமட் ஷுஹைலி குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்