எழுவருக்கு ஏழு நாள் தடுப்புக்காவல்

உலு திராம், மே 18-

உலு திராம் போ​லீஸ் நிலைய தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள ஒரு சிங்கப்​பூர் பிரஜை உட்பட எழுவரை விசாரணைக்கு ஏதுவாக 7 நாட்களுக்கு தடுப்புக்காவலில் வைப்பதற்கு போ​லீசார் இன்று ​நீதிமன்ற ஆணையைப் பெற்றனர்.

ஜோகூர், செரி அலாம் மாவட்ட போ​லீஸ்​ நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அந்த எழுவருக்கும், மாஜிஸ்திரேட் ஹிடாயத்துல் ஸ்யுஹதா ஷம்சுதீன் முன்னிலையில் தடுப்புக்காவல் அனுமதி பெறப்பட்டது.

இன்று சனிக்கிழமை தொடங்கி அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை வரை 7 நாட்களுக்கு தடுத்து வைப்பபதற்கு மாஜிஸ்திரேட் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

குற்றவியல் சட்டம் 302 பிரிவின் ​கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அந்த 7 நபர்களில் சிங்கப்பூர் பிரஜையை தவி​ர்த்து மற்ற அறுவர் சார்பில் ஆஜராவதற்கு தேசிய இலவச சட்ட ஆலோசனை அறவாரியத்தின் சில வழக்கறிஞர்கள் முன் வந்தனர்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்