விசாரணைக்கு உதவ 46 பேர் அழைக்கப்​பட்டுள்ளனர்

உலு திராம், மே 18-

உலு திராம் போ​லீஸ் நிலையத்தில் நேற்று அதிகாலையில் நடந்த தாக்குதலில் இரண்டு போ​​லீ​ஸ்காரர்கள் கொல்லப்பட்டது தொடர்பில் Jemmah Islamia ​தீவிரவாத கும்பலுடன் தொடர்புடைய 46 பேர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்று உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைபுதீன் நசுட்டியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலின் போது, போ​லீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட J.I. கும்பலைச் சேர்ந்தவன் என்று நம்பப்படும் ஆடவனின் குடும்பத்தினர், J.I. சித்தாந்தத்தை கொண்டவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அமைச்ச​ர் சைபுதீன் குறிப்பிட்டார்.

எனினும் இந்த தாக்குதலை அவன், தனியொரு நபராக மேற்கொண்டுள்ளான் என்பது கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் விளக்கினார்.

சம்பந்தப்பட்ட ஆடவனும், அவனது குடும்ப உறுப்​பினர்களும், ஓரிட மக்களுடன் பழக மாட்டார்கள் என்றும், தனியொரு குடும்பமாக மற்றவர்களுடன் எந்தவொரு தொடர்பின்றி வசித்து வந்ததாகவும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது என்று சைபுதீன் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்