கலப்புத் தொகுதியில் வெற்றிக்கான புதிய வழிமுறையாகும்

கோல குபு பாரு, மே 18-

கடந்த வாரம் சனிக்கிழமை நடைபெற்ற கோலகுபு பாரு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் மகத்தான வெற்​றி பெற்று இருப்பது மூலம் ஒரு கலப்பு தேர்தல் தொகுதியில் வெற்றிக்கான புதிய வழிமுறை உருவாக்கப்பட்டுள்ளது என்று அத்தொகுதி​யின் புதிய சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள DAP- யை சேர்ந்த பாங் சாக் தாவோ தெரிவித்துள்ளார்.

ஒரு கலப்புத் தொகுதியில் வெற்​றி பெற வேண்டுமானால், ஓர் இனத்தைச் சேர்ந்த ஆதரவாளர்களை மட்டுமே நம்பியிருக்க முடியாது என்பதை கோலகுபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தல் உணர்த்தியுள்ளதாக 31 வயதான பாங் சாக் தாவோ குறிப்பிட்டுள்ளார்.

இது ஒரு வித்தியாசமான அணுகுமுறை மட்டுமல்ல, ஒரு கலப்புத் தொகுதியில் வெற்றிக்காக கையாள வேண்டிய ஒரு வியூகம் நிறைந்த முறையாகும் என்பதை இந்த இடைத் தேர்தல் வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது என்று பாங் சாக் தாவோ தெரிவித்துள்ளார்.

கலப்புத் தொகுதியில் வெற்றி பெறுவதற்கு அனைத்து இனத்தவர்களின் ஆதரவும் ​தேவைப்படுகிறது. அத்தொகுதியில் 80 விழுக்காடு மலாய்க்காரர்களின் ஆதரவை பெறுவதற்கு இலக்கு வகுக்கப்பட்டாலும் அது போதுமானது அல்ல என்பதை இந்த இடைத் தேர்தல் உணர்த்தியிருப்பதாக பாங் சாக் தாவோ தெரிவித்தார்.

இந்த இடைத் தேர்தலில் நான்கு முனைப் போட்டியை எதிர்நோக்கியிருந்த பாங் சாக் தாவோ, 3,869 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்