லோரி பாதளத்தில் விழுந்ததில் மூவர் உயிரிழந்தனர்

கோத்தா பாரு, மே 15-

லோரி ஒன்று, சாலையை விட்டு விலகி, குடை சாய்ந்ததில், அந்த கனரக வாகனத்திலிருந்து தூக்கி எறியப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படும் மூவர், பாதாளத்தில் விழுந்து உயிரிழந்தனர்.

இச்சம்பவம் இன்று காலை 10.40 மணியளவில் கிளந்தான், குவா மூசாங், ப்ரோஜெல் டி ராஜா லோஜிங் என்ற இடத்தில் நிகழ்ந்தது.

40 வயது மதிக்கத்தக்க மூவரும் தலையிலும், உடலிலும் பலத்த காயங்களுக்கு ஆளாகி, சம்பவ இடத்திலேயே மாண்டனர் என்று தீயணைப்பு, மீட்புப்படை செயலாக்க கோமாண்டர் நிக் முகமட் ஃபக்ரி முகமட் நவி தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்