ஒரு டன் உதவிப்பொருட்கள் பறிமுதல்

மலாக்கா, மார்ச் 5 –

ரெஸ்தொரான் மாமாக் உணவகத்திற்கு சொந்தமான ஒரு சட்டவிரோத மளிகைக்கடையில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த உதவித் தொகைக்குரிய சுமார் ஒரு டன் அத்தியாவசியப் பொருட்களை அதிகாரிகள் பரிமுதல் செய்தனர்.

மலாக்கா, பான்டார் ஹீலிர் மலாக்கா ராயா வில் செயல்பட்டு வரும் அந்த ரெச்தொரன் மாமாக் உணவகம், இந்த கொல்லைப்புற நடவடிக்கைக்கு மூளையாக இருந்து உதவித் தொகைக்குரிய சுமார் ஒரு டன் பொருட்களை பதுக்கி வைத்திருந்தது அம்பலத்திற்கு வந்ததாக மலாக்கா மாநில உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்சை செலவின அமைச்சின் அமலாக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சோதனை இன்று காலை 11.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்டதாக அதன் இயக்குநர் னொரெனா ஜாபார் தெரிவித்தார்.

493 பாக்கெட் சமையல் எண்ணெய், 50 பாக்கெட் கோதுமை மாவு, 276 பாக்கெட் சீனி, எரிவாயு கலன்கள் உட்பட பலவகையான உதவித் தொகைக்குரிய பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்