மலையிலிருந்து இறங்கும் போது ஆடவர் மரணம்

பாலிங், மார்ச் 5 –

கெடா, கூனுங் பாலிங் மலை உச்சியிலிருந்து கீழே இறங்கும் போது ஆடவர் ஒருவர் சுயநினைவின்றி உயிரிழந்தார்.

இன்று பிற்பகல் 12:13 மணியளவில் கிடைக்கபெற்ற அவசர அழைப்பினை தொடர்ந்து தீயணைப்பு, மீட்புப்படையினர் அவ்விடத்திற்கு விரைந்ததாக பாலிங் தீயணைப்பு, மீட்புப்படை நிலையத்தின் தலைவர் மொகமாட் ஜாமில் மாட் டாவுட் தெரிவித்தார்.

கெடாவில் உள்ள மலேசிய தீயணைப்பு, மீட்புத்துறையின் செயல்பாட்டு மையம், Baling தீயணைப்பு வாகனத்தை சம்பவ இடத்திற்கு அனுப்பியதாக மொகமாட் ஜாமில் கூறினார்.

பாதிக்கப்பட்ட 39 வயதுடைய ஆடவர் கடல் மட்டத்திலிருந்து 200 மீட்டர் உயரத்தில் சுயநினைவற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக மொகமாட் ஜாமில் விவரித்தார்.

பாதிக்கப்பட்ட நபர் தனது நண்பர்களுடனும் தீயணைப்பு வீரர்களுடன் மலையேறும் நடவடிக்கையில் ஈடுபட்டு பின்பு மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் மருத்துவ அதிகாரிகள் அவர் உயிரிழந்ததை உறுதிப்படுத்தியதாக இன்று அவர் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்