தீர்மானத்தை வாபஸ் பெற்றார் அகமட் ஜாஹிட்

கோலாலம்பூர், மார்ச் 5 –

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளார் என்று நாடளுமன்றத்தில் பகிரங்கமாக குற்றஞ்சாட்டிய பெர்சத்து கட்சியைச் சேர்ந்த பெரிக்காத்தான் நேஷனல் தாசெக் கெகோர் எம்.பி. வான் சைபுல் வான் ஜான் ஐ, மக்களவைக்கூட்டத்தில் பங்கேற்பதிலிருந்து 6 மாதத்திற்கு இடை நீக்கம் செய்வதற்கு துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி கொண்டு வரவிருந்த தீர்மானத்தை இன்று வாபஸ் பெற்றுக்கொண்டார்.

கடந்த வாரம் பிரதமர் அன்வாரின் மீது கண்மூடித்தனமான குற்றச்சாட்டை முன்வைத்த வான் சைபுல் வான் ஜான், தாம் கொண்டு வந்துள்ள குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளிப்பதற்கு மக்களவை சபா நாயகர் ஜொஹாரி அப்துல் ஒரு வாய்ப்பு வழங்கியிருப்பதால், அந்த எம்.பி.யை இடை நீக்கம் செய்வதற்கு தாம் கொண்டு வரவிருந்த தீர்மானத்தை மீட்டுக்கொள்வதாக அகமட் ஜாஹிட் தெரிவித்தார்.

தவிர அந்த குற்றச்சாட்டை மீட்டுக்கொள்ளவும், வாபஸ் பெறவும் வான் சைபுல் முடிவு செய்ததால், அவருக்கு எதிராக 6 மாத கால இடைநீக்க நடவடிக்கையை முன்மொழிய தாம் உத்தேசிக்கவில்லை என்று துணைப்பிரதமர் அகமட் ஜாஹிட் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்