ஒழுக்கக்கேடான நடவடிக்கையில் ஈடுபட்ட அந்நிய பிரஜைகள்

அப்துல்லா ஹுக்கூம் அடுக்குமாடி குடியிருப்பில் முறையான பயணப் பத்திர ஆவணமின்றி சட்டவிரோதமாக தங்கியுள்ள அந்நிய நாட்டை சேர்ந்த குடியேறிகள் ஒழுக்கமற்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அப்பகுதியில் குடியிருப்புவாசிகள் புகார் தெரிவித்தனர்.

திறந்த வெளியில் சூதாடுதல், மது அருந்தி போத்தல் புட்டிகளை வீட்டின் முன் எறிதல், சண்டையிடுதல் போன்ற ஒழுக்கமற்ற செயல்கள் அவ்விடத்தில் வசிக்கும் மக்களை பெரிதும் பாதிப்பதாக தெரியவந்துள்ளது.

கிடைக்கபெற்ற புகார்களை தொடர்ந்து மலேசிய குடிவரவுத் துறை நடத்திய திடீர் சோதனையில் 567 அந்நிய பிரஜைகள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சோதனையில் 27 வயது மியன்மாரை சேர்ந்த ஆடவன் ஒருவர் 10 ஆவது மாடியிலிருந்து குதிக்க முற்பட்ட போது போலீசாரால் தடுத்து பிடிக்கப்பட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்