ஒவ்வொரு ஆண்டும் சராசரி 9,500 பேர் சிறுநீரக கோளாறினால் பாதிப்பு

கோலலம்பூர், மார்ச் 9 –

நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சராசரி 9,500 பேர் சிறுநீரக கோளாற்றுக்கு ஆளாகி, டையாலிசிஸ் சிகிச்சைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இந்த எண்ணிக்கை பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது என்று சுகாதார துணை அமைச்சர் டத்துக் லுகானிஸ்மான் அவாங் சௌனி தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் சிறுநீரக பாதிப்புக்கு ஆளாகின்றவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது, அது குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தற்போது நாட்டில் மொத்தம் 47 லட்சம் சிறுநீரக நோயாளிகள் உள்ளனர். சிறுநீரக நோய் தொடர்பில் நவீன மருத்துவ வசதிகள் வந்த போதிலும் இதனை முன்கூட்டியே கண்டறிந்து உரிய சிகிச்சை அளிக்கப்படுவதற்கான விழிப்புணர்வு அதிகரிக்கப்பட வேண்டும் என்று டத்துக் லுகானிஸ்மான் வலியுறுத்தினார்.

இன்று மார்ச் 9 ஆம் தேதி உலக சிறுநீரக தினத்தையொட்டி, கோலாலம்பூரில் நடத்தப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான சிறுநீரக தொடர்பான விழிப்புணர்வு தினத்தை துணை அமைச்சர் மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்