தீ கிராமத்தில் பரவ தொடங்கியது மக்கள் கவலை

தாவ்ரான், மார்ச் 10 –

வறண்ட காலநிலை மற்றும் அதிக வெப்பத்தினால் சபா மாநிலத்தில் பல காடுகள் உட்பட புதர்களில் தீ பரவுவதற்கு காரணமாக விளைந்தது.

நேற்று பிற்பகலில் கம்பூங் தம்பாலுகு, பாக்குட்ஆகிய பகுதிகளில் அருகே உள்ள வனப்பகுதியில் தீ கொளுந்துவிட்டு எரிய தொடங்கியதுடன் அருகில் இருக்கும் கிராமப்புறங்களிலும் அத்தீ பரவ தொடங்கியது.

அந்த தீ அருகில் இருக்கும் குடியிருப்புவாசிகளின் வீடுகளை பாதிக்கும் என்கிற பட்சத்தில் அப்பகுதி மக்கள் தங்களின் உடைமைகளை பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

கடந்த ஜனவரியில் அவ்விடத்தில் உள்ள வயல், காடு, புதர் ஆகியவை தீயில் பாதிக்கப்பட்டிருப்பதாக 500 க்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்டதாகவும் இதன் விளைவாக கடந்த சில நாட்கள் அவ்விடம் கடும் புகை மண்டலமாக காட்சியளித்தது என்றும் Tuaran, மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புப்படை தெரிவித்துள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்