ஓட்டுநர் உரிமம் இல்லை, ஜேபிஜே அதிகாரிகளிடம் வாக்குவாதம் புரிந்த பிரஜை

பினாங்கு, மே 15-

பினாங்கு, தாமான் அரோவானா மற்றும் தாமான் பெலாங்கி ஆகிய இரு இடங்களில் நேற்று மேற்கொண்ட Ops Khas Pemandu Warga Asing திடீர் சோதனையின் போது வெளிநாட்டவர்கள் சட்டவிரோதமாக பயன்படுத்தியதாக 15 மோட்டார் சைக்கிள்களும் ஒரு லாரியும் பறிமுதல் செய்யப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் அனைத்தும் முறையான ஆவணங்கள் கொண்டிருக்காததாகவும் குறிப்பாக ஓட்டுநர் உரிமம் இல்லாத காரணங்களால் கைப்பற்றப்பட்டன. இதில் பாகிஸ்தான், ரோஹிங்கியா, வங்காளதேச உட்பட இந்தோனேசிய பிரஜைகள் சம்பந்தப்பட்டிருப்பதாக சாலை போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

இதில் பாகிஸ்தான் லாரி ஓட்டிநர் ஒருவரிடம் சோதனை மேற்கொண்ட போது ஓட்டுநர் உரிமத்தை வழங்க அவர் மறுத்த வேளை ஜே,பி.ஜே அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

மேலும் சந்தேகிக்கும் அந்நபரிடம் ஓட்டுநர் உரிமம் இல்லாததை ஜேபிஜே அதிகாரிகள் உறுதி செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக அது முகநூலில் தகவல் வெளியிட்டிருந்தது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்