போதைப்பொருள் கடத்தியதாக ஆறு பேரை போலீசார் கைது

சிரம்பான், மே 15-

சிரம்பான், டெர்மினல் ஒன்று பேருந்து நிலையத்திற்கு முன்புறத்தில் உள்ள ஜாலான் சுங்காய் உஜோங் -கில் 5,203 கிராம் சயாபு வகையைச் சேர்ந்த போதைப்பொருளுடன் நான்கு வெளிநாட்டவர்கள் உட்பட மொத்தம் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு 9 மணியளவில் சம்பந்தப்பட்ட இடத்தில் மேற்கொண்ட Operasi Tapis திடீர் சோதனையின் போது இரண்டு உள்ளூர் மற்றும் நான்கு வெளிநாட்டு ஆண்களை போதைப்பொருள் குற்றப்புலனாய்வுத்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டதாக நெகிரி செம்பிலான் போலீஸ் தலைவர் டத்தோ அஹ்மட் ஜாஃபிர் முகமட் யூசோப் தெரிவித்தார்.

அவ்விடத்தில் 4 லட்சத்து 16 ஆயிரத்து 006 வெள்ளி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதன் மூலம் போதைப்பொருளுக்கு அடிமையான மொத்தம் 10,406 பேரை இதிலிருந்து காப்பாற்ற முடிந்ததாக டத்தோ அஹ்மட் ஜாஃபிர் குறிப்பிட்டார்.

இதுக்குறித்து குற்றவியல் சட்டம் 39B பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் கைது செய்யப்பட்ட அந்நபர்கள் அனைவரும் வருகின்ற திங்கட்கிழமை தொடங்கி ஏழு நாட்களுக்கு தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருப்பதாக அவர் மேலும் அறிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்