மாரா தொழில்நுட்ப பல்லைக்கழகத்தில் பூமிபுத்ரா அல்லாத மாணவர்களை சேர்ப்பதா?

UiTM, மே 15-

University Teknologi Mara எனப்படும் மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பூமிபுத்ரா அல்லாத மாணவர்களை சேர்க்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அப்பல்பலைக்கழக மாணவர்கள், கறுப்புச்சட்டை அணியும் போராட்டத்தை நாளை வியாழக்கிழமை தொடங்குமாறு அப்பல்கலைக்கழகத்தின் மாணவர் மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது. .

UiTM பல்கலைக்கழத்தில் பூமிபுத்ரா அல்லாத மாணவர்கள் சேர்க்கப்படுவதை முழு வீச்சில் எதிர்ப்பதற்காக தொடங்கப்பட்டுள்ள இந்த பிரசாரத்தை ஆதரித்து, அப்பல்கலைக்கழகத்தின் அனைத்து மாணவர்களும் சமூக வலைத்தளத்தில் தங்கள் புகைப்படத்துடன் எதிர்ப்பு பிரச்சார வாசகத்தை பதிவேற்றம் செய்யும்படி மாணவர் மன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த எதிர்ப்பு பிரச்சாரம் நேற்று தொடங்கப்பட்டுள்ளது.

UiTM பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டதற்கான நோக்கமே, வசதி குறைந்த பூமிபுத்ரா மாணவர்கள், பல்கலைக்கழகம் போன்ற உயர்கல்விக்கூடங்களின் சேர்ந்து, தங்கள் கல்வித் தகுதியை உயர்த்திக்கொள்வதாகும்.

பூமிபுத்ராக்களுக்கான சிறப்பு சலுகை மற்றும் அவ்வினத்தை உயர்த்துவதற்கு ஒரு வடிக்காலாக, பூமிபுத்ரா மாணவர்கள் சேர்க்கப்படுவதற்கும், அவர்களை பட்டதாரிகளாக உருவாக்குதற்கும், அவர்கள் உயர்கல்வி பெறுவதை உறுதி செய்யவும் மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது.

அந்தப் பல்கலைக்கழகம் தனது தொடக்க கால உன்னத நோக்கத்திலிருந்து ஒரு போதும் விலகி விடக்கூடாது. அதன் நோக்கமும், அபிலாஷையும் தொடர்ந்து நிலைநிறுத்தப்பட வேண்டும் என்று மாணவர் மன்றம் வலியுறுத்தியுள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்