ஓரிட போதைப்பொருள் கும்பல் முறியடிப்பு

ஜோகூர் பாரு, மார்ச் 7 –

வாடகை வீடுகளை ஓரிட போதைப்பொருள் மையங்களாக பயன்படுத்தி வந்த போதைப்பொருள் கடத்தல் கும்பலை ஜோகூர் போலீசார் முறியடித்துள்ளனர்.

இவ்வார முற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சுமார் பத்து லட்சம் வெள்ளி பெறுமானமுள்ள பலதரப்பட்ட போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது மூலம் இக்கும்பல் முறியடிக்கப்பட்டுள்ளதாக ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் கமிஷனர் ம். குமார் தெரிவித்தார்.

ஜோகூர், செத்தியா இன்டா மற்றும் ஜோகூர் ஜெயா பகுதிகளில் ஐந்து ஆடம்பர அடுக்குமாடி வீடுகள் மற்றும் ஒரு தரை வீடு ஆகியவற்றில் கடந்த திங்கட்கிழமையும், செவ்வாய்க்கிழமையும் நடத்தப்பட்ட வெவ்வேறு ஆறு சோதனை நடவடிக்கைகளில் பல வகையான போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டதாக ஜோகூர் பாருவில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் கமிஷனர் குமார் குறிப்பிட்டார்.

இச்சோதனை நடவடிக்கைகளில் 22 க்கும் 39 க்கும் இடைப்பட்ட வயதுடைய ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் மூவர் ஆண்கள் ஆவர். இவர்களுடன் சேர்ந்து உள்ளூரைச் சேர்ந்த ஒரு பெண் மற்றும் அந்நிய நாட்டைச் சேர்ந்த இரு பெண்கள் பிடிபட்டனர் என்று கமிஷனர் குமார் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்