கொள்கைகளை அமல்டுத்துவதில் அமைச்சு உறுதியாக உள்ளது

கோலாலம்பூர், மார்ச் 7 –

இலக்கவியல் பொருளாதார மன்றம் மற்றும் நான்காவது தொழில்துறை புரட்சியான MED4IRN ஆகியவற்றில் அங்கீகரிக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் கொள்கைகள் செயல்படுத்தப்படுவதையும், அவற்றின் நோக்கங்கள் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்வதிலும் இலக்கவியல் அமைச்சு கடப்பாட்டை கொண்டுள்ளது என்று அதன் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ இன்று மக்களவையில் தெரிவித்தார்.

2023 ஆம் ஆண்டில் MED4IRN இன் சாதனைகளில் சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்தவும், தொடக்கத்தில் உள்ளூர் ஈடுபாட்டை அதிகரிக்கவும் குறிப்பாக Startup நிறுவன சுற்றுச்சூழல் அமைப்பில் உள்ள ஏஜென்சிகள் மற்றும் அதன் முக்கிய பங்களிப்பாளர்களின் ஒத்துழைப்புடன் செயல்பாடுகளை ஒருங்கிணைத்து, மறுசீரமைப்பதற்கான ஒற்றைச் சாளர முயற்சியை செயல்படுத்துதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக கோபிந்த் சிங் டியோ குறிப்பிட்டார்.

தவிர, இலக்கவியல் பொருளாதார மன்றம், தேசிய இலக்கவியல் மேம்பாட்டுத்திட்டம், செயல்படுத்தப்படுவதை விரைவுப்படுத்தியுள்ளது.

இது இலக்கவியல் சுய அடையாளம் மற்றும் அங்கீகாரத்தை ஏற்படுத்தக்கூடியதாகும். இது தனிநபரின் பயோமெட்ரிக் பண்புகளின் அடிப்படையை முக்கிய கூறாக கொண்டுள்ளது என்று கோபிந்த்சி சிங் தெரிவித்தார்.

2023 ஆம் ஆண்டில் MED4IRN- இன் சாதனைகள் தொடர்பில் தெமெர்லோ, பெரிகாத்தான் னெசியோனல் உறுப்பினர் சாலாமியா மொகமாட் னோர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையில் கோபிந்த் சிங் டியோ மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்