பூலாய் எம்.பி.யின் பரிந்துரையை சாடினார் ஜாயிட் இப்ராஹிம்

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 7 –

பல்வகைப் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகத் தளங்களில் பணியாற்றும் முஸ்லிம் பணியாளர்கள், பீர் போன்ற மதுபான டின்கள் அல்லது பாட்டில்களை தொடாமல் இருக்க வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்வதற்கு அத்தகைய வர்த்தகத் தளங்களில் மதுபான வகைகளை கையாளுதற்கு சுயசேவைக்குரிய வென்டிங் இயந்திரங்கள் பொருத்தப்பட வேண்டும் என்று இன்று நாடாளுமன்றத்தில் பரிந்துரை செய்துள்ள Pulai எம்.பி. சுஹாய்சான் காயாட் டை முன்னாள் சட்டத்துறை அமைச்சர் டத்துக் சாயிட் இப்ராஹிம் கடுமையாக சாடினார்.

முஸ்லிம் பணியாளர்கள், தொழில் நிமித்தமாக மதுபான பாட்டில்கள் அல்லது டின்களை தொடக்கூடாது என்றால், பீர் பாட்டில்களை ஏற்றிச்செல்லும் லோரிகளின் ஓட்டுநர்களாகவோ அல்லது உதவியாளர்களாகவோ எந்த மலாய்க்காரரும் வேலையில் அமரக்கூடாது என்று அந்த சட்டத்துறை முன்னாள் அமைச்சர் எதிர்வினையாற்றினார்.

இதேபோன்று அரச மலேசிய சுங்கத்துறையில் கடமையாற்றும் மலாய்க்கார அதிகாரிகளும் தங்கள் சோதனையின் போது மதுபான போத்தல்களை பரிசோதிக்க அனுமதிக்கக்கூடாது.

ஹலால் தொழில் துறை அல்லாத அத்தகைய அரசாங்கப்பணிகளுக்கு முஸ்லிம் அல்லாதவர்களை பணிக்கு அமர்த்துவதற்கு அரசாங்கம் தயாராக இருக்கிறதா ? என்று ஒரு மிதவாதியான டத்துக் சாயிட் இப்ராஹிம் கேள்வி எழுப்பினார்.
உலகமே நவீனத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் வேளையில் குறுகிய சிந்ததனையில் உழன்று கொண்டு இருப்பதை விடுத்து, பரந்து சிந்தனையும், தெளிவும் நமக்கு வேண்டும் என்று பூலாய் எம்.பி.க்கு டத்துக் சாயிட் இப்ராஹிம் அறிவுறுத்தினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்