கடத்தல் சிண்டிகேட் விசாரணைக்கு, MACC அரசு ஊழியரை தேடுகிறது

கோலாலம்பூர், மார்ச் 19 –

நாட்டில் மது மற்றும் சிகரெட்டுகளை கடத்தும் சிண்டிகேட்டில் ஈடுபட்டிருப்பதாக கூறப்படும் நபருக்கு சொந்தமான 6 மில்லியன் வெள்ளி மதிப்பிலான எட்டு விலை உயர்ந்த வாகனங்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் பறிமுதல் செய்த விசாரணையை தொடர்ந்து 38 வயதுடைய அரசு பணியாளர் ஒருவரை எம்.ஏ.சி.சி தேடி வருகின்றது.

விசாரணைக்கு உதவும் வகையில் பான்டார் பாரு நீலாய், பெர்சியாரான் இல்மு பி.பி.ன், மேசாஹில் ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் இருப்பதாக நம்பப்படும் அரசு ஊழியரான மொகமாட் சைட் இப்ராஹிம் புகையிலை, சிகரெட் மற்றும் மது போன்றவற்றை நாட்டிற்குள் கடத்துகின்ற சிண்டிகேட்டின் செயல்பாடுகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதற்கு எம்.ஏ.சி.சி அந்நபரை தேடுகின்றனர்.

சந்தேகிக்கும் அந்நபரை குறித்து விவரம் தெரிந்தவர்கள் அருகிலுள்ள காவல்நிலையத்தில் புகார் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றது. கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் அதிகாரிகளை ஏமாற்றுவதற்காக போலியான அறிவிப்புகளை வெளியிட்டு, மது, புகையிலை சிகரெட் ஆகிய பொருட்களை கடத்தியதாக கூறப்படுகின்றது.

குறிப்பிடப்பட்டுள்ள அரசு தொழிலாளருக்கு லஞ்சம் கொடுத்து மலேசிய சுங்கத்துறையின் அனுமதியின்றி காரின் உதிரி பாகங்கள் உட்பட அழகுசாதனப் பொருட்களை கடத்தியதாக தெரியவந்துள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்