மாணவர்களை PVC குழாய்களால் தாக்கிய நான்கு பேர் கைது

காஜாங், மார்ச் 19 –

காஜாங், சுங்கை லோங் கில் இடைநிலைப்பள்ளி மாணவர்களுடன் சண்டையில் ஈடுபட்டதாக கூறப்படும் நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை மாலை 3:04 மணியளவில் இச்சம்பவம் தொடர்பாக கிடைக்க பெற்ற புகாரை தொடர்ந்து சந்தேகிக்கும் அந்நபர்கள் கைது செய்யப்பட்டதாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்தென் கொமிசியோனர் மொகமாட் சைட் ஹாசான் தெரிவித்தார்.

இச்சம்பவத்தின் போது இரண்டு பள்ளி மாணவர்களை 10 பேர் கொண்ட குழு ஒன்று paip polyvinyl chloride (PVC) குழாய்கள் உட்பட இரும்பு கம்பிகளை பயன்படுத்தி தாக்கியதாக மொகமாட் சைட் கூறினார்.

பாதிக்கப்பட்ட 16 மற்றும் 17 வயதுடைய அம்மாணவர்கள் தாக்கப்பட்டத்தில் உடலிலும் தலையிலும் கடும் காயத்திற்கு ஆளாகி காஜாங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக அவர் விளக்கினார்.

சம்பவ இடத்திலிருந்து இரண்டு வெவ்வேறு வாகனங்களில் தப்பி சென்ற 18 முதல் 21 வயதிற்கு உட்பட்ட நான்கு பேரை போலீசார் அம்பாங்கில் கைது செய்துள்ளதாக மொகமாட் சைட் குறிப்பிட்டார்.

கைது செய்யப்பட்ட அந்நபர்கள் மார்ச் 22 ஆம் தேதி வரையில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருப்பதுடன் சம்பவம் நிகழ்ந்த காரணத்தை குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக மொகமாட் சைட் மேலும் தெளிவுப்படுத்தினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்