35 மணிநேரத்தில் இரண்டு படகுகள் கைப்பற்றப்பட்டன

பாசிர் பூத்தே, மார்ச் 19

நாட்டில் அத்துமீறி நுழைந்ததற்காக 23 வியட்நாம் பணியாளர்கள், வியட்நாம் பயணிகள் கைது செய்யப்பட்ட வேளையில் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட இரண்டு படகுகளையும் கிளந்தான், மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனம் (APMM) பறிமுதல் செய்தனர்.

கடந்த சனிக்கிழமை தோக் பாலி யிலிருந்து 160 முதல் 162 கடல் மைல் தொலைத்தூரத்தில் ஓபி டாமாய் ,ஓபி னாகா மற்றும் ஓபி தீரிஸ் ஆகிய திடீர் சோதனையின் மூலம் அந்நபர்கள் கைது செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.

இச்சோதனையில் 1000 கிலோகிராம் கடல்வாழ் உயிரினங்கள், மீன்பிடி உபகரணங்கள், தகவல் தொடர்பு சாதனங்கள் உட்பட சுமார் 3 மில்லியன் மதிப்பிலான 2,500 லீட்டர் டீசல் போன்றவை கைப்பற்றப்பட்டன.

அவ்விரு படகுகளும் கிளந்தான் கடல்சார் ஜெட்டியை வந்தடைய 35 மணி நேரத்திற்கும் மேலாக ஆளாகி நேற்று இரவு 11 மணியளவில் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்தடைந்ததாக கிளந்தான், மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனத்தின் இயக்குநர் இர்வான் ஷா சோஹாடி தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்